முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடித்து, தயாரித்துள்ள புதிய படம் ‘சூரரைப் போற்று’. ‘ஏர் டெக்கான்’ விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இப்படத்தை பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.
இதில் சூர்யா ‘நெடுமாறன் ராஜாங்கம்’ என்ற கேரக்டரில் வலம் வரவுள்ளார். அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளாராம். மேலும், டோலிவுட் நடிகர் மோகன் பாபு, பாலிவுட் நடிகர்கள் பரேஷ் ராவல் – ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் மிக முக்கிய ரோல்களில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார், நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருக்கிறார், ஜாக்கி கலை இயக்குநராகவும், சதீஷ் சூர்யா படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.
இதற்கு ‘உறியடி’ புகழ் விஜய் குமார் வசனம் எழுதியுள்ளார். வெகு விரைவில் இப்படம் ‘அமேசான் ப்ரைம்’-யில் ரிலீஸாகப்போகிறது. தற்போது, இந்த படத்தின் ‘ஆகாசம்’ பாடலை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இப்பாடல் சூர்யா ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பிடித்துள்ளது.
A gift of love and friendship, from us to you!
#Aagasam
https://t.co/uMd9v4Ofhb#AakaasamNeeHaddhuRa
https://t.co/PCESurdVgC@Suriya_offl @2D_ENTPVTLTD #SudhaKongara @PrimeVideoIN @rajsekarpandian @SonyMusicSouth #thaikkudambridge #SooraraiPottruOnPrime
— G.V.Prakash Kumar (@gvprakash) October 23, 2020