“அந்த ஒரு விஷயம் மட்டும் தான் வருத்தமா இருக்கு”… ‘பிக் பாஸ் 5’யில் எலிமினேட்டான பிறகு சுருதி வெளியிட்ட வீடியோ!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5 கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இசை வாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா தேஷ்பாண்டே, அபிநய், பாவனி ரெட்டி, சின்னப்பொண்ணு, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, சுருதி, அக்ஷரா ரெட்டி, ஐக்கி பெர்ரி, தாமரைச்செல்வி, சிபி, நிரூப் ஆகிய 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி நமீதா மாரிமுத்து தவிர்க்க முடியாத சில காரணங்களால் வெளியேறி விட்டார். கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி நாடியா சங் எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த அக்டோபர் 24-ஆம் தேதி அபிஷேக் ராஜா எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி சின்னப்பொண்ணு எலிமினேட் செய்யப்பட்டார்.

கடந்த நவம்பர் 7-ஆம் தேதி சுருதி எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, சுருதி ‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் “என்ன உங்கள்ல ஒருத்தியா நினைச்சு எனக்கு கொடுத்த love and support-க்கு ரொம்ப ரொம்ப நன்றி. நான் வெளியில வந்த வருத்தமே எனக்கு கொஞ்சம்கூட இல்லை. நான் 100 நாள் இருப்பேன்னு நினைச்சவங்கள மட்டும் என்னால satisfy பண்ண முடியலையேங்குற வருத்தம் மட்டும் தான் எனக்கு இருக்கு” என்று கூறியுள்ளார்.

Share.