‘பாகுபலி’-யில் ‘அவந்திகா’ ரோலில் மாஸ் காட்டிய தமன்னா… அதற்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?
February 3, 2022 / 11:55 AM IST
|Follow Us
சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் தமன்னா. தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே நெகட்டிவ் ஷேடில் நடித்திருந்தார் தமன்னா. அந்த படம் தான் ‘கேடி’. ‘கேடி’-க்கு பிறகு கதையின் நாயகியாக நடித்த ‘கல்லூரி’ திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டாகி தமன்னாவுக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. அதன் பிறகு தமன்னாவுக்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘படிக்காதவன், அயன், ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை, பையா, சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை, வேங்கை, வீரம், பாகுபலி, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, தோழா, தர்மதுரை, தேவி, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், ஸ்கெட்ச், பெட்ரோமாக்ஸ், ஆக்ஷன்’ என படங்கள் குவிந்தது. தமன்னா தமிழ் மொழியில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.
இப்போது, தமன்னா நடிப்பில் தெலுங்கில் ‘குர்துண்டா சீதகளம், F3, தட் இஸ் மகாலக்ஷ்மி, போலா ஷங்கர்’, ஹிந்தியில் ‘போலே சுடியான், ப்ளான் ஏ ப்ளான் பி’ என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. தமன்னாவின் கேரியரில் மிக முக்கியமான படங்கள் ‘பாகுபலி 1 & 2’. இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக தமன்னா நடிக்க, டாப் இயக்குநர்களில் ஒருவரான எஸ்.எஸ்.ராஜமௌலி இதனை இயக்கியிருந்தார்.
இதில் தமன்னா ‘அவந்திகா’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் அனுஷ்கா ஷெட்டி, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன், ரானா டகுபதி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. தற்போது, நடிகை தமன்னா ‘பாகுபலி 1’-க்காக ரூ.3 கோடியும், ‘பாகுபலி 2’-க்காக ரூ.5 கோடியும் சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.