• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » தமிழ் சினிமாவில் பத்து வருடங்களை கடந்து ஜொலிக்கும் நடிகைகள்!

தமிழ் சினிமாவில் பத்து வருடங்களை கடந்து ஜொலிக்கும் நடிகைகள்!

  • July 4, 2020 / 02:56 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
தமிழ் சினிமாவில் பத்து வருடங்களை கடந்து ஜொலிக்கும் நடிகைகள்!

1. நயன்தாரா- 2005 ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளிவந்த “ஐயா” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் நயன்தாரா. பின்பு சந்திரமுகி, பில்லா, தனி ஒருவன், ராஜா ராணி, மாயா, நானும் ரவுடிதான் என்று பல வெற்றிப்படங்களில் நடித்து “லேடி சூப்பர் ஸ்டார்” என்ற பட்டத்துடன் தற்போதும் தமிழ் திரைப்படவுலகில் ஜொலித்து வருகிறார் நயன்தாரா.

2. தமன்னா- 2006 ஆம் ஆண்டு ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த “கேடி” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் தமன்னா. படிக்காதவன், அயன், பையா, சிறுத்தை, வேங்கை ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். இன்றும் ரசிகர்களிடத்தில் நீங்காத இடத்தில் இருக்கிறார் தமன்னா.

3. திரிஷா- 1999ஆம் வருடம் வெளிவந்த “ஜோடி” திரைப்படத்தில் நடிகை சிம்ரனுடன் சிறு வேடத்தில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான திரிஷா, 2003 ஆம் ஆண்டு ப்ரியதர்ஷன் இயக்கத்தில் “லேசா லேசா” படத்தின் மூலம் நடிகையாக உருவெடுத்தார். அன்றிலிருந்து இன்றுவரை அவருக்கென தனி இடம் இருக்கிறது. கில்லி, திருப்பாச்சி, உனக்கும் எனக்கும், விண்ணைத்தாண்டி வருவாயா என பல வெற்றி படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

4. அனுஷ்கா- 2006 ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த “ரெண்டு” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் அனுஷ்கா. பின் வேட்டைக்காரன், சிங்கம், தெய்வத்திருமகள், இரண்டாம் உலகம், என்னை அறிந்தால் என பல வெற்றி படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து இன்றும் ஜொலித்து வருகிறார்.

5. காஜல் அகர்வால்- 2008 ஆம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் வெளிவந்த “பழனி” திரைப்படத்தில் நடிகர் பரத்துடன் தமிழ் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார் காஜல்அகர்வால். ஆனால் இதற்கு முன்னரே பாரதிராஜாவின் “பொம்மலாட்டம்” திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கி விட்டார். பல போராட்டங்களுக்குப் பிறகு வெற்றி படங்களில் தற்போது நடித்து வரும் இவர், தமிழில் பல முன்னணி ஹீரோக்களுடனும் நடித்து விட்டார்.

6. ஹன்சிகா மோத்வானி- 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு படமான “தேசமுதுடு” மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்த ஹன்சிகா மோத்வானி, சுராஜ் இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு வெளிவந்த “மாப்பிள்ளை” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். இவர் தமிழ் திரையுலகிற்கு வந்து 10 ஆண்டுகளை தொடவுள்ளார்.

7. சமந்த அக்கினெனி- 2010 ஆம் ஆண்டு வெளிவந்த “விண்ணைத்தாண்டி வருவாயா” படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சமந்தா ருத் பிரபு, அதே வருடம் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் “பானா காத்தாடி” படத்தில் நடிகையாக உருவெடுத்தார். தற்போது தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்ட சமந்தா இன்றும் ரசிகர்களின் கனவு கன்னிதான்!

8. ஜோதிகா- 1999ஆம் வருடம் வெளிவந்த “வாலி” திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் ஜோதிகா. பின் “பூவெல்லாம் கேட்டுப்பார்” படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடித்த ஜோதிகா, பிறகு பல வெற்றி படங்களை பல முன்னணி நடிகர்களுடன் கொடுத்திருக்கிறார். இன்று தமிழ் சினிமாவில் பெண்கள் சார்ந்த கதைகளை எடுத்துக் கூறும் படங்களில் நடித்துவரும் ஜோதிகா காலங்களை கடந்து இன்றும் ஜொலிக்கிறார்!

9. ஸ்ரேயா- 2003 ஆம் ஆண்டு ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த “எனக்கு 20 உனக்கு 18” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் ஸ்ரேயா. பின் மழை, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, அழகியதமிழ்மகன் என்று பல முன்னணி நடிகர்களுடன் வெற்றி படங்களை கொடுத்தார். தற்போது அடுத்து வெளிவர உள்ள “நரகாசுரன்” படத்திலும் நடிக்கவுள்ளார்.

10. சிம்ரன்- சபாபதி, தக்ஷிணாமூர்த்தி இயக்கத்தில் 1997 ஆம் வருடம் வெளிவந்த “வி.ஐ.பி” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் சிம்ரன். தொடர்ந்து தமிழில் பல வெற்றி படங்களை பல முன்னணி நடிகர்களுடன் நடித்து கொடுத்த சிம்ரன் கனவுக்கன்னியாக திகழ்ந்தார். சமீபத்தில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்திருக்கும் இவர் காலம் கடந்து ஜொலிக்கும் ஹீரோயின்!

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #anushka
  • #Asin
  • #Jyothika
  • #Nayanthara
  • #Samantha

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Vijay & Ghilli : விஜய் – த்ரிஷா ஜோடியாக நடித்த ‘கில்லி’… ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Vijay & Ghilli : விஜய் – த்ரிஷா ஜோடியாக நடித்த ‘கில்லி’… ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Samantha Ruth Prabhu : பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் நடிகை சமந்தா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Samantha Ruth Prabhu : பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் நடிகை சமந்தா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Trisha & AV Raju : தன்னை அவதூறாக பேசிய ஏ.வி.ராஜுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நடிகை த்ரிஷா!

Trisha & AV Raju : தன்னை அவதூறாக பேசிய ஏ.வி.ராஜுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நடிகை த்ரிஷா!

Thug Life & Trisha : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட த்ரிஷா!

Thug Life & Trisha : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட த்ரிஷா!

Karunas & Trisha : த்ரிஷா குறித்தும், தன்னை பற்றியும் அவதூறாக பேசிய ஏ.வி.ராஜு மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் கருணாஸ் புகார்!

Karunas & Trisha : த்ரிஷா குறித்தும், தன்னை பற்றியும் அவதூறாக பேசிய ஏ.வி.ராஜு மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் கருணாஸ் புகார்!

Trisha & Cheran :  நடிகை த்ரிஷா குறித்து அதிமுக பிரமுகரின் சர்ச்சை பேச்சு… ட்விட்டரில் கொந்தளித்த இயக்குநரும், நடிகருமான சேரன்!

Trisha & Cheran : நடிகை த்ரிஷா குறித்து அதிமுக பிரமுகரின் சர்ச்சை பேச்சு… ட்விட்டரில் கொந்தளித்த இயக்குநரும், நடிகருமான சேரன்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version