துப்பாக்கி படத்தின் மூலம் இணைந்த விஜய் முருகதாஸ் கூட்டணி, அதன் பிறகு கத்தி, சர்கார் என்று தொடர்ந்தது. அனால் துப்பாக்கி, கத்தி அளவிற்கு சர்கார் படத்தில் கதையோ, சுவாரஸ்யமான காட்சிகளோ இல்லாததால் தோல்வியை தழுவியது.
விஷால் சுந்தர்.சி :
விஷால் சுந்தர் சியுடன் இணைந்த முதல் படம் மதகஜராஜா. ஆனால் பல பிரெச்சனைகள் காரணமாக இந்த படம் வெளிவராமலே போனது. அதனை தொடர்ந்து “ஆம்பள” என்ற படத்தின் மூலம் இணைந்து பெரும் வெற்றியை பெற்றனர். இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக “ஆக்ஷன்” என்ற திரைப்படத்தில் இணைந்தனர். மக்களிடையே பெரும் எதிர்பார்ப்போடு வழிவந்த இப்படம் படு தோல்வியை தழுவியது.
ரஜினி – கே.எஸ்.ரவிக்குமார் :
கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் ரஜினி கூட்டணியில் உருவான முத்து திரைப்படம் செம ஹிட் அடிக்க, அதை தொடர்ந்து படையப்பாவில் இணைந்தனர். படையப்பாவும் பட்டாசை கிளப்ப மூன்றாவது முறையாக “லிங்கா” வில் இணைந்தனர். ஆனால் படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. அதே சமயம் நெட்டிசன்களிடம் சிக்கி சின்னாபின்னமானது.
சிவகார்த்திகேயன் – பொன்ராம்:
சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கிய படம் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”. இதனை இயக்குநல் பொன்ராம் இயக்கியிருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து “ரஜினிமுருகன்” என்ற படத்தில் மீண்டும் இணைந்தனர். அந்த படமும் வசூல் ரீதியாக செம ஹிட். மூன்றாவது முறையாக “சீமராஜா” என்ற படத்தில் மீண்டும் இனைய, அந்த படம் பெரும் பிளாப் ஆனது.