டாப் ஹீரோயினுக்கு அடுத்த மாதம் திருமணம்… இந்த முடிவுக்கு பிரபல நடிகை தான் காரணமாமே!

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அந்த நம்பர் நடிகை. இப்போது ரௌடி பட இயக்குநரை காதலித்து வருகிறார். சமீபத்தில், இவர்களின் திருமணம் தொடர்பாக அந்த இயக்குநர் அளித்த பேட்டி ஒன்றில் “எங்களுக்கு சில ப்ளான்ஸ் இருக்கு. அதை எல்லாம் முதல்ல முடிக்கணும். இப்போதைக்கு நாங்க எங்க வேலையில தான் அதிக கவனம் செலுத்துறோம். எப்போ நாங்க பண்ணிட்டு இருக்குற லவ் போர் அடிக்குதோ, அப்போ தான் திருமணம் செய்து கொள்வோம்.

அந்த டைம் நாங்களே அதிகாரப்பூர்வமா அறிவிப்போம்” என்று கூறியிருந்தார். இந்நிலையில், வருகிற மார்ச் மாதமே இவர்கள் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது. இந்த திடீர் முடிவுக்கு காரணம் யார்? என்று விசாரித்தபோது, இப்போது அந்த நம்பர் நடிகை – ரௌடி பட இயக்குநர் காம்போவில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வரும் இன்னொரு நடிகை தான் என்று சொல்கிறார்கள். ஏற்கனவே திருமணமான அந்த நடிகை தான் இந்த நம்பர் நடிகையிடம் “கண்டிப்பாக திருமணத்துக்கு பிறகும் திரையுலகில் அடுத்த லெவலுக்கு செல்லும் வாய்ப்பு வரும்.

நான் கூட ஆரம்பத்தில் திருமணம் செய்து கொள்ள பயந்தேன். ஆனா, அப்போ திருமணம் செய்து கொண்டது தான் நான் எடுத்த சரியான முடிவு என்று என்னால் இப்போது உணர முடிகிறது. இப்பவும் பலருடன் சேர்ந்து நடித்து வருகிறேன், ஆனா, எனக்கு எந்த ஒரு கண்டிஷனும் போடாமல் என் கணவர் சப்போர்ட் பண்ணுகிறார்” என்று சொல்லியிருக்கிறார். இதனால் தான் நம்பர் நடிகை டக்கென திருமணத்துக்கு கிரீன் சிக்னல் கொடுத்து விட்டாராம்.

Share.