விக்ரம் படத்தை பாராட்டிய பிரபலம்!!

நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் ராஜ்கமல். ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் சில தினங்களுக்கு முன்னால் வெளியான படம் விக்ரம். இந்த படம் வெளியாகி உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. விக்ரம் படத்தை பார்த்த பல சினிமா நட்சத்திரங்கள் பலர் பாராட்டி வருகின்றனர். நாளுக்கு நாள் படத்தின் வசூல் சாதனை அதிகரித்து வருகிறது.

விக்ரம் படத்தை பார்த்த ரசிகர்கள் திரைபிரபலங்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகை மெக்கன்ஸி வெஸ்ட்மோர் கமல் குறித்து பதிவிட்டிருந்தது வைரலாகி வருகிறது. அந்த பதிவில் ரசிகர் ஒருவர் நீங்கள் விக்ரம் படத்தை பார்க்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த நடிகை மெக்கன்ஸி வெஸ்ட்மோர், “என்னுடைய படத்தின் பணிகள் முடிந்த பிறகு கண்டிப்பாக விக்ரம் படம் பார்ப்பேன். அவர் என்ன பண்ணாலும் தங்கமாகத் தான் இருக்கும்” எனக் பதிவிட்டிருந்தார். இவரின் இந்த பதிவு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. கமல் நடிப்பில் வெளியான இந்தியன், அவ்வை சண்முகி, தசாவதாரம் ஆகிய படங்களுக்கு நடிகை மெக்கன்ஸி வெஸ்ட்மோரின் தந்தை மைக்கேல் வெஸ்ட்மோர் மேக்கப் ஆர்ட்டிஸ்டாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

 

Share.