தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இவர் நடிப்பில் ‘ஜெயிலர், லால் சலாம்’, இயக்குநர் த.செ.ஞானவேல் படம், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது.
இதில் ரஜினியின் 169-வது படமான ‘ஜெயிலர்’ நேற்று (ஆகஸ்ட் 10-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்கியுள்ளார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இதற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இதில் முக்கிய ரோல்களில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி, மிர்னா மேனன், ‘ரித்து ராக்ஸ்’ ரித்விக், சுனில், தமன்னா, கிஷோர், ஜாஃபர் சாதிக், மாரிமுத்து, சரவணன், அறந்தாங்கி நிஷா, மகாநதி ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மேலும், கெஸ்ட் ரோல்களில் மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மோகன்லால், கன்னட நடிகர் ஷிவராஜ்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் நடித்துள்ளனர். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இந்த படத்தை பார்த்து ரசித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இயக்குநர் நெல்சனை நேரில் அழைத்து பாராட்டியதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை நெல்சனே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus