வில்லனாக நடிக்க அதிக சம்பளம் கேட்ட ‘வி’ நடிகர்… ஷாக்கான அப்படத்தின் ஹீரோ!

சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் இந்த நடிகர். திரையுலகில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் என்ட்ரியான இந்த நடிகருக்கு ஆரம்பத்தில் சின்ன ரோல் தான் சில படங்களில் கிடைத்தது.

அதன் பிறகு ஹீரோவாக அசத்தி டாப் ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து விட்டார். சமீபத்தில், டாப் ஹீரோவின் தமிழ் படம் மற்றும் புதுமுகங்கள் நடித்த தெலுங்கு படத்திலும் இந்த ஹீரோ வில்லனாக மிரட்டியிருந்தார். இதனால் பல தெலுங்கு படத்தில் இவரை ஒப்பந்தம் செய்ய சில இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆசைப் படுகிறார்கள். ஆகையால், அந்த நடிகர் தனது சம்பளத்தை டக்கென உயர்த்தி விட்டாராம். ஒரு நாளைக்கே ரூ.1 கோடி கேட்கிறாராம்.

Top Actor Hikes His Remuneration For Villain Role1

மேலும், ஹிந்தியிலும் இந்த நடிகருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்நிலையில், முன்னணி ‘க’ நடிகர் – ‘வாத்தி’ பட இயக்குநர் காம்போவில் உருவாக உள்ள புதிய படத்தில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் நடிக்க இந்த நடிகரிடம் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார்கள். ஆனால், இந்த நடிகரோ வில்லனாக நடிக்க அதிக சம்பளம் கேட்டிருக்கிறார். இத்தனை கோடி சம்பளமா? என அப்படத்தை தயாரிக்கும் ‘க’ நடிகர் ஷாக்காகியுள்ளார்.

Share.