தனுஷின் ‘மாரி 2’ படத்தில் வில்லனாக மிரட்டி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியவர் மலையாள நடிகர் டொவினோ தாமஸ். இவரின் புதிய படத்துக்கு ‘மின்னல் முரளி’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குநர் பாசில் ஜோசப் இயக்கி வருகிறாராம். இதில் டொவினோ தாமஸ் ‘சூப்பர் ஹீரோ’வாக வலம் வரவுள்ளாராம்.
மேலும், முக்கிய ரோல்களில் குரு சோமசுந்தரம், அஜு வர்கீஸ், ஃபெமினா ஜார்ஜ், சினேகா பாபு, ஷெல்லி நபுகுமார், பிஜுகுட்டன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஷான் ரஹ்மான் இசையமைக்கும் இதற்கு சமீர் தாஹீர் ஒளிப்பதிவு செய்கிறார், லிவிங்க்ஸ்டன் மேத்யூ படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
இதனை ‘வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர்’ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் ஒரே நேரத்தில் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் ரெடியாகுகிறதாம். சமீபத்தில், இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. தற்போது, படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதியும், நடிகை கீர்த்தி சுரேஷும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். இந்த டீசர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது.
Happy to share #MinnalMurali teaser.
Congrats teamhttps://t.co/oqJEJ0AiSX@ttovino @sofiathomas @shaanrahman @iBasil @cedinp @greatkevu @bijuantony
— VijaySethupathi (@VijaySethuOffl) August 31, 2020
I am so excited to present the Tamil teaser of #MinnalMurali!
Can’t wait for this superhero film
All the best @ttovino & team!
@sofiathomas @shaanrahman @iBasil @cedinp @greatkevu @bijuantonyhttps://t.co/BnkcfSDD5C pic.twitter.com/LFIEUt947u
— Keerthy Suresh (@KeerthyOfficial) August 31, 2020