உண்மைச்சம்பவத்தில் நடிக்கும் திரிஷா

நடிகை திரிஷா மௌனம் பேசியதே என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார் . அதன் பிறகு மனசெல்லாம் , சாமி , கில்லி , ஆயுத எழுத்து , திருப்பாச்சி , ஆறு என இவர் நடித்த பல மிக பெரிய வெற்றிகளை குவித்தது . தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பெற்று முன்னணி நடிகை ஆனார் .

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான இவரது 96 எனும் படம் நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது . இதனை தொடர்ந்து 2019-ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து பேட்ட படத்தில் நடித்து இருந்தார். அதன் பிறகு பரமபத விளையாட்டு படத்தில் நடித்து இருந்தார் . இதனை அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்து உள்ளார் . மேலும் சோனி ஓ.டி.டி தளத்திற்கு பிருந்தா எனும் வெப் சீரிஸ் நடித்து கொண்டு இருக்கிறார் .

இதனை தொடர்ந்து ரோடு என்கிற படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார் . இந்த படம் மதுரையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது என்ற செய்தி வெளியாகி இருக்கிறது . மேலும் மியா ஜார்ஜ் , குக் வித் கோமாளி சந்தோஷ் , M.S. பாஸ்கர் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்க உள்ளனர் .சாம்.C.S இந்த படத்திற்கு இசையமைக்கிறார் மேலும் அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் இந்த படத்தை இயக்க உள்ளார் .

Share.