விஜய் மற்றும் விஜய் சேதுபதி திரைப்படங்களில் உள்ள ஒற்றுமை – நடிகை திரிஷா!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேல் நட்சத்திர நடிகையாக தமிழ் திரையுலகில் திகழ்ந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்றும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவரான நடிகை திரிஷா அவ்வப்போது புகைப்படங்களை தன் ரசிகர்களுக்காக வெளியிட்டு வந்தார். சமீபத்தில் சமூக வலைத்தளத்திலிருந்து பிரேக் எடுத்து, பின்பு மீண்டும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்த திரிஷா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை தவிர இதர புகைப்படங்கள் அனைத்தையும் மொத்தமாக நீக்கிவிட்டார்.

தமிழ், மலையாளம் என்று படு பிஸியாக இருக்கும் நடிகை திரிஷா மணிரத்னம் இயக்கத்தில் அடுத்து வெளிவரவிருக்கும் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக “ராம்” எனும் படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது திரிஷா தனது சமூக வலைத்தளத்தில் தான் விஜய்யுடன் சேர்ந்து நடித்த “கில்லி” படம் மற்றும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த “96” படம் ஆகியவற்றுள் இருக்கும் ஒற்றுமை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Share.