நயன்தாராவிடம் கேட்காமல் என்னிடம் மட்டும் கேட்குறீங்க?-ன்னு கொந்தளித்த த்ரிஷா… செக் வைத்த தயாரிப்பாளர் சங்கம்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் த்ரிஷா. இப்போது, த்ரிஷா நடிப்பில் ‘பரமபதம் விளையாட்டு, கர்ஜனை, ராங்கி, சுகர், சதுரங்க வேட்டை 2, ராம், பொன்னியின் செல்வன்’ என ஏழு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ரிலீஸுக்காக நடிகை த்ரிஷாவின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. திருஞானம் இயக்கியுள்ள இப்படத்தை வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’-யில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இதனால் நடிகை த்ரிஷாவின் ரசிகர்கள் ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட் ஆனார்கள்.

இந்நிலையில், இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகை த்ரிஷா கலந்து கொள்ள மாட்டேன் என்று சொல்லியிருக்கிறார். இதனால் நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் த்ரிஷா மீது புகார் கொடுத்துள்ளார் இப்படத்தின் தயாரிப்பாளர். இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தினரிடம் பேசிய த்ரிஷா “நடிகை நயன்தாரா அவர் நடிக்கும் எந்த படங்களின் புரோமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை. ஆனால், அவரை எதுவும் கேட்காமல் என்னிடம் மட்டும் ஏன் கேள்வி கேட்கிறீர்கள்?” என்று சொல்லியிருக்கிறார்.

அதற்கு அப்படத்தின் தயாரிப்பாளர் “நயன்தாரா agreement sign பண்ணும்போதே அதில் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என்று சொல்லி விடுகிறார். ஆனால், நீங்களோ agreement-யில் இரண்டு நாட்கள் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன் என்று சொல்லியிருந்தீர்கள்” என்று கூறியிருக்கிறார். ஆனாலும், த்ரிஷா தான் இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என்று சொல்லிவிட்டார். இதனால் கடுப்பான தயாரிப்பாளர் சங்கம், த்ரிஷாவுக்கு ரெட் கார்டு கொடுத்து இனிமேல் படங்களில் நடிக்க தடை விதித்து விடலாம் என்று முடிவெடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.