சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிரத்னம். இப்போது மணிரத்னம் பிரம்மாண்ட படமான ‘பொன்னியின் செல்வன்’ஐ இயக்கி கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ‘ஜெயம்’ ரவி, கார்த்தி, த்ரிஷா, விக்ரம் பிரபு, ஜெயராம், பிரபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ரகுமான், கிஷோர், அஷ்வின், ரியாஸ் கான், லால் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து கொண்டிருக்கிறார். இந்த படத்தை அதிக பொருட்செலவில் ‘மெட்ராஸ் டாக்கீஸ் – லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து கொண்டிருக்கிறது.
சமீபத்தில், இப்படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் ப்ளான் போட்டுள்ளதாகவும், முதல் பாகம் அடுத்த ஆண்டு (2022) ரிலீஸாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறதாம். தற்போது, நடிகை த்ரிஷா தனது காட்சிகளுக்கான டப்பிக் பணியை ஆரம்பித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
Update
:
Our thalaivii #SouthQueen @trishtrashersstarted dubbing for #PonniyinSelvan
#kundhavai will going to be an another memorable characters
in her list
#ladysuperstar #Trisha #TrishaKrishnan #PS1 @LycaProductions pic.twitter.com/BG9oJfmuqP
— Ladysuperstar Trisha FC
(@superstar3sha) October 9, 2021