அடேங்கப்பா… ரஜினியின் ‘பேட்ட’ படத்துக்காக த்ரிஷா வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் த்ரிஷா. ஆரம்பத்தில் ‘ஜோடி’ படத்தில் கெஸ்ட் ரோலில் மட்டுமே வந்து சென்றார். அதன் பிறகு ‘மௌனம் பேசியதே’ படத்தில் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார் த்ரிஷா. இதில் ‘சந்தியா’ என்ற கதாபாத்திரமாக வலம் வந்து ரசிகர்களின் லைக்ஸை குவித்தார் த்ரிஷா.

‘மௌனம் பேசியதே’ ஹிட்டிற்கு பிறகு த்ரிஷாவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து அவரின் கால்ஷீட் டைரியில் ‘மனசெல்லாம், சாமி, லேசா லேசா, எனக்கு 20 உனக்கு 18, கில்லி, ஆய்த எழுத்து, திருப்பாச்சி, உனக்கும் எனக்கும், அபியும் நானும், விண்ணைத்தாண்டி வருவாயா, 96, பேட்ட, பரமபதம் விளையாட்டு’ என படங்கள் குவிந்தது.

தமிழ் மொழி மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார் த்ரிஷா. இப்போது த்ரிஷா நடிப்பில் ‘கர்ஜனை, ராங்கி, சுகர், சதுரங்க வேட்டை 2, ராம், பொன்னியின் செல்வன்’ என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. த்ரிஷாவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘பேட்ட’. இதில் ஹீரோவாக ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிக்க, இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் சசிக்குமார், விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், மாளவிகா மோகனன், சிம்ரன், பாபி சிம்ஹா, சனந்த் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது, இந்த படத்துக்காக நடிகை த்ரிஷா ரூ.1 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.