7 கெட்டப்புகளில் விக்ரம் நடித்துள்ள ‘கோப்ரா’ படத்துக்காக அந்த விஷயத்தை செய்யப்போகும் உதயநிதி ஸ்டாலின்!

சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் விக்ரம் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார். இப்போது விக்ரம் நடிப்பில் ‘கோப்ரா, துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன்’ மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் விக்ரமின் நடிப்புக்கு சரியான தீனி போடும் வகையில் அமைந்துள்ள படம் ‘கோப்ரா’. இந்த படத்தை ‘டிமான்ட்டி காலனி’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்க, ஹீரோயினாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோலில் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்துள்ளாராம்.

இந்த படத்துக்கு இன்னொரு ஹைலைட்டாக அமைந்திருப்பது ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மானின் இசை. ஏற்கனவே, இசை புயலின் இசையில் ‘தும்பி துள்ளல், அதீரா’ ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பிடித்தது. சமீபத்தில், ரிலீஸான ஃபர்ஸ்ட் லுக் டீசர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது.

இதன் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலின் தனது ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ மூலம் கைப்பற்றியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. படத்தை வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Share.