கமல் ஹாசனுடன் கூட்டணி அமைக்கும் உதயநிதி ஸ்டாலின்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் ‘ஏஞ்சல், கண்ணை நம்பாதே, மாமன்னன், கலகத் தலைவன்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தனது ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ மூலம் தயாரிக்கிறாராம்.

இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் “5 வருட ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’யின் சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக, உடன் பங்காற்றியவர்களை நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கௌரவித்தோம்.

‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தின் கதை நாயகனாகும் பெருமைமிகு வாய்ப்பை எனக்கு வழங்கி, அதற்கான அறிவிப்பை வெளியிட்ட கமல் ஹாசன் சாருக்கு நன்றி” என்று கூறியுள்ளார். மிக விரைவில் இப்படத்தின் இயக்குநர் மற்றும் இதில் நடிக்கவிருக்கும் இதர நடிகர்கள், பணியாற்றவிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் அறிவிக்கப்படுமாம்.

Share.