கமலின் ‘தேவர் மகன்’ படத்துக்காக வடிவேலு வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?
December 22, 2022 / 02:05 AM IST
|Follow Us
‘காமெடி’ என்று சொன்னாலே வடிவேலுவின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் வடிவேலு பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம்.
வடிவேலு ஹீரோவாக நடித்துள்ள புதிய காமெடி படமான ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சுராஜ் இயக்கியுள்ளார்.
இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வடிவேலுவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘தேவர் மகன்’.
1992-ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் சிவாஜி கணேசன் – ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் இணைந்து நடித்திருந்தனர். பிரபல இயக்குநர் பரதன் இயக்கியிருந்த இந்த படம் மெகா ஹிட்டானது. தற்போது, இதில் நடிப்பதற்காக நடிகர் வடிவேலு 15,000 ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus