கலையாக் கலையே கமல்… உலக நாயகனை புகழ்ந்து வைரமுத்து போட்ட ட்வீட்!
August 15, 2020 / 06:27 AM IST
|Follow Us
திரையுலகில் ஒரு கலைஞன் தான் செய்ய நினைத்த அனைத்தையும் தொடர்ந்து செய்து வருகிறார். அவர் தான் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், நடன இயக்குநர், பாடலாசிரியர், பின்னணி பாடகர் என இவர் ஆற்றிய பணிகள் ஏராளம். கமல் ஹாசன் திரையுலகில் சாதித்த விஷயங்களின் லிஸ்ட் மிகப் பெரியது.
1960-ஆம் ஆண்டு வெளியான தமிழ் படமான ‘களத்தூர் கண்ணம்மா’-வில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமல் ஹாசன். கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதியுடன் ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படம் வெளியாகி 61 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆகையால், ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் திரையுலகில் அறிமுகமாகி 61 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு ஒரு ஸ்பெஷல் common dp-யை பல பிரபலங்கள் ட்விட்டரில் வெளியிட்டனர்.
தற்போது, இது தொடர்பாக பிரபல பாடலாசிரியர் ‘கவிப்பேரரசு’ வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் “பரமக்குடியின் அருமைக் கலைஞன் பிறப்பு சிவப்பு; இருப்பு கறுப்பு.மரபுகடந்த புதுக்கவிதை புரிதல் கடிது; புரிந்தால் இனிது. ஆண்டுகள் அறுபது காய்த்த பின்னும் நனிகனி குலுங்கும் தனிவிருட்சம். கலைத்தாய் தன் நெற்றியில் மாற்றி மாற்றிச் சூடுவது திலகத்தையும் இவர் பெயரையும்.. கலையாக் கலையே கமல்” என்று பதிவிட்டுள்ளார்.
பரமக்குடியின் அருமைக் கலைஞன் பிறப்பு சிவப்பு; இருப்பு கறுப்பு. மரபுகடந்த புதுக்கவிதை புரிதல் கடிது; புரிந்தால் இனிது. ஆண்டுகள் அறுபது காய்த்த பின்னும் நனிகனி குலுங்கும் தனிவிருட்சம். கலைத்தாய் தன் நெற்றியில் மாற்றி மாற்றிச் சூடுவது திலகத்தையும் இவர் பெயரையும் ‘கலையாக் கலையே கமல்’