தமிழில் ‘மாயா, ஆஹா, தெய்வ மகள், லட்சுமி வந்தாச்சு’ போன்ற டிவி சீரியல்களில் நடித்ததன் மூலம் அதிக கவனம் ஈர்த்த நடிகை வாணி போஜன். இவர் இந்த ஆண்டு (2020) பிப்ரவரி மாதம் ரிலீஸான ‘ஓ மை கடவுளே’ படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து வாணி போஜன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘லாக்கப்’.
இதில் வைபவ் ஹீரோவாக நடித்துள்ளார். எஸ்.ஜி.சார்லஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் பூர்ணா, ஈஸ்வரி ராவ், வெங்கட் பிரபு ஆகியோர் மிக முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் ஜானர் படமான இதனை ‘ஷ்வேத்’ நிறுவனம் சார்பில் நடிகர் நித்தின் சத்யா தயாரித்துள்ளார்.
‘கொரோனா’ பிரச்சனையால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இதனால், சில பிரபல நடிகைகளின் படங்கள் சமீபத்தில் நேரடியாக OTT-யில் ரிலீஸானது. தற்போது, வாணி போஜன் நடித்துள்ள ‘லாக்கப்’ படத்தை ‘ஜீ 5’-வில் வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.