தமிழில் ‘மாயா, ஆஹா, தெய்வ மகள், லட்சுமி வந்தாச்சு’ போன்ற டிவி சீரியல்களில் நடித்ததன் மூலம் அதிக கவனம் ஈர்த்த நடிகை வாணி போஜன். இவர் இந்த ஆண்டு (2020) பிப்ரவரி மாதம் ரிலீஸான ‘ஓ மை கடவுளே’ படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து வாணி போஜன் நடிப்பில் உருவான புதிய படம் ‘லாக்கப்’.
இதில் வைபவ் ஹீரோவாக நடித்திருந்தார். எஸ்.ஜி.சார்லஸ் இயக்கியிருந்த இந்த படத்தில் பூர்ணா, ஈஸ்வரி ராவ், வெங்கட் பிரபு ஆகியோர் மிக முக்கிய ரோல்களில் நடித்திருந்தனர். ‘கொரோனா’ பிரச்சனையால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இதனால், ‘லாக்கப்’ படம் ‘ஜீ 5’-வில் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி ரிலீஸானது.
தற்போது, வாணி போஜனின் கால்ஷீட் டைரியில் ஒரு புதிய படம் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ‘தாழ் திறவா’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தில் ஹீரோவாக ஆதவ் கண்ணதாசன் நடிக்கவுள்ளாராம். மேலும், முக்கிய ரோல்களில் சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு ஆகியோர் நடிக்கவுள்ளனர். இப்படத்தை இயக்குநர் பரணி சேகரன் இயக்கவுள்ளார். இன்று இதன் மிரட்டலான டைட்டில் லுக் போஸ்டரை பிரபல ஹீரோயின் ஆண்ட்ரியா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.