சமீப காலமாக இணையதளம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட செய்தி வனிதா விஜயகுமாரின் திருமணம் மற்றும் அதன் தொடர்பான விமர்சனங்களும் ஆகும். இதற்கு பலவாறு தன் பதிலடிகளை கொடுத்து வந்த வனிதா அவ்வப்போது சில பிரபலங்கள் குறித்தும் தன் கருத்துக்களைப் பேசி தன்னுடைய பாலோவர்ஸ் எண்ணிக்கையை அதிகரித்து வந்தார்.
வனிதா பிரச்சனை இணையதளத்தில் பரவ ஆரம்பித்தது முதல் அவருக்கு ஒரு செலிபிரிட்டி லுக் இணையதளத்தில் கிடைத்துள்ளது. இதனைப் பயன்படுத்தி குக்கரி சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
தற்போது தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் கோவா சென்ற வனிதா அங்கு பீட்டர் பாலுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தி வந்தார். இந்த புகைப்படங்களை பலர் கலாய்த்து கமெண்ட் செய்து வந்தார்கள்.
இதைத்தொடர்ந்து கோவாவில் இருந்து வந்த இவர்கள் இருவர் இடையில் பெரிய வாக்குவாதம் ஏற்பட்டு, தற்போது இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்று கண்ணீர் மல்க பேட்டி அளித்திருந்தார் வனிதா.
தற்போது கமல்ஹாசன் பிறந்தநாளையொட்டி வனிதா கேக் ஒன்றை தானே செய்துள்ளதாகவும் இது தன் சின்ன பரிசு என்றும் கூறியுள்ளார். இதை சில நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகிறார்கள்.
View this post on Instagram
A small gift from myside …freshly baked for kamal sir..
A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on