பிரபல நடிகை வனிதா விஜயகுமாருக்கு கடந்த ஜூன் 27ம் தேதி திருமணம் நடந்தேறியது. இவர் இயக்குனர் பீட்டர்பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ அவர்களது இல்லத்தில் கிறிஸ்டியன் முறைப்படி இவர்களுக்கு திருமணம் நடந்தது.
வனிதா விஜயகுமாருக்கு இது மூன்றாவது திருமணம் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம். பலவிதமான சர்ச்சைகளில் சிக்கிய வனிதா விஜயகுமார் கடைசியில் திருமணம் என்று கூறியபோது இணையதளம் முழுவதும் இவரது திருமணம் பற்றிய பேச்சுதான் வைரல் ஆகியது.
இந்த சூழ்நிலையில் இவர் தற்போது திருமணம் செய்து கொண்ட பீட்டர் பால் என்பதற்கு ஏற்கனவே திருமணம் நடந்ததாகவும் முதல் மனைவியிடம் அவர் விவகாரத்தை பெறாமலேயே வனிதா விஜயகுமாரை திருமணம் செய்து கொண்டார் என்றும் பீட்டரின் முதல் மனைவி இவர்களது திருமணம் முடிந்த கணமே புகார் கொடுத்துள்ளார்.
இதைப்பற்றி தன் கணவருக்கு முழு உறுதுணையாக இருக்கும் வனிதா விஜயகுமார் நாங்கள் இதை சட்டப்படி சந்திப்போம் என்று பேட்டி அளித்திருந்தார். மேலும் பணம் வேண்டிதான் அவர் புகார் செய்துள்ளார் என்றும் வனிதா கூறியிருந்தார்.
இந்நிலையில் பிரபல இயக்குனர் மற்றும் நடிகையான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இந்த சர்ச்சையை பற்றி டுவிட்டரில்” இப்போதுதான் நான் செய்தியை பார்த்தேன். ஏற்கனவே கல்யாணமாகி இரண்டு குழந்தையுடன் இருக்கும் ஒருவர் எப்படி விவாகரத்து பெறாமல் இன்னொரு கல்யாணம் செய்து கொள்வார். இந்த அளவுக்கு படிப்பறிவு கூட இல்லையா? ஏன் அவரது மனைவி திருமணம் முடியும் வரை காத்திருந்து பின் புகார் கொடுத்தார்?” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர்” வனிதா விஜயகுமார் கடந்துவந்த பிரச்சனைகளுக்கு பிறகு இந்த திருமணத்தில் நன்றாக வாழ்வார் என்று அனைவருடன் சேர்ந்து நானும் எதிர்பார்த்தேன். ஆனால் இவ்வளவு பெரிய விஷயத்தை எப்படி அவர் பார்க்காமல் விட்டார்? பெண்கள் அதிகாரம் குறித்து சிறிதேனும் விழிப்புணர்ச்சி அனைவருக்குமே இருக்க வேண்டும்! இல்லையேல் இந்த சமுதாயத்தில் எந்த மாற்றமும் வராது” இவ்வாறு லட்சுமி ராமகிருஷ்ணன் குறிப்பிட்டிருக்கிறார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வனிதா தனது டுவிட்டரில்” உங்களது அக்கறைக்கு நன்றி. நான் நல்ல அறிவும் திறமையும் கொண்ட ஒருவர்தான், என்னால் எனது வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி முடிவு செய்துக்கொள்ள முடியும். உங்களின் விருப்பம் மற்றும் முடிவுகள் என்னுடைய வாழ்க்கை எந்த விதத்திலும் பாதிக்காது. மேலும் இது என் குடும்பம் சார்ந்த விஷயம் இதை பற்றி பேசுவதற்கு இது ஒன்றும் உங்கள் பப்ளிக் ஷோ கிடையாது. உங்களுக்கு உண்மையான அக்கறை இருந்திருந்தால் இதைப்பற்றி நீங்கள் என்னிடம் பர்சனலாக பேசியிருக்கலாம். இந்தப் பிரச்சினையை வைத்து விளம்பரம் தேட முயற்சி செய்வதால் மட்டுமே இதை பப்ளிக்காக போஸ்ட் செய்துள்ளீர்கள். நீங்கள் நீதிபதியாக உங்கள் பப்ளிக் ஷோவில் அப்பாவிகளுக்கு மட்டும் இருக்கவேண்டும் எனது வாழ்க்கையில் நுழைய தேவையில்லை. இந்த பப்ளிக் கமெண்டை அகற்றிவிட்டு உங்கள் வாழ்க்கையை மட்டும் பாருங்கள்” இவ்வாறு அவர் ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது கணவர் பீட்டர் பாலுக்கு உறுதுணையாக அவர்” ஒரு கதைக்கு இரண்டு பக்கங்கள் இருக்கும். ஒருவர் திடீரென்று முன்வந்து ஒரு விஷயத்தைப் பற்றி எடுத்துரைத்தால், அவர் கூறுவது அனைத்தும் உண்மை என்று பொருள் இல்லை. ஒரு தம்பதி விவாகரத்து பெறுகிறார்கள் என்பது அவர்களது பர்ஸனல் விஷயம். இதில் தலையிடுவதற்கு எனக்கு கூட உரிமை இல்லை. அதனால் இதில் கேள்வி கேட்பதற்கு உங்கள் யாருக்கும் உரிமை கிடையாது. இதை அவர்களே பார்த்துக்கொள்வார்கள், நீங்கள் இதிலிருந்து விலகி இருப்பது நல்லது” என்று அவர் இந்த பிரச்சினையை பற்றி கேள்வி கேட்டவர்களிடம் பதிலளித்துள்ளார்.
இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக லட்சுமிராமகிருஷ்ணன்” வனிதா விஜயகுமாரின் பிரச்சினை பற்றி பேசுவதை அனைவரும் நிறுத்திக் கொள்வோம். நாட்டில் கவனிக்க வேண்டிய பிரச்சினை பலது இருக்கிறது” என்று கூறியுள்ளார்.