வெந்து தணிந்தது காடு எப்பொழுது வெளியாகும் ?

நடிகர் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் மாநாடு. நீண்ட வருடம் கழித்து இந்த படம் சிம்புவிற்கு வெற்றியை தந்த படமாக திகழ்கின்றது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிகர் சிம்புவிற்கு நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தன.அந்த வகையில் சிம்பு தற்பொழுது
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்கிற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் .

‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ படங்களுக்குப் பிறகு சிம்பு – கௌதம் மேனன் கூட்டணி ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். எனவே இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு எழுந்துள்ளது . இந்த படத்தின் முதல் பாடல் வருகின்ற 06-ஆம் தேதி வெளியாகி இருக்கிறது .

இந்நிலையில் இந்த படம் ஆகஸ்ட் மாதம் 12-ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது . நடிகர் சிம்பு தற்பொழுது பத்து தல படத்தில் நடித்து வருகிறார் . நடிகர் சிம்பு தொடர்ந்து படங்களில் நடித்து வருவதால் அவரது ரசிகர் உற்சாகத்தில் இருக்கின்றனர் .

Share.