முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இப்போது சூர்யா நடிப்பில் ‘சூரரைப் போற்று, வாடிவாசல்’ மற்றும் இயக்குநர் பாண்டிராஜ் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. கடந்த ஜூலை 23-ஆம் தேதி சூர்யாவின் பர்த்டே சர்ப்ரைஸாக, ‘வாடிவாசல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் அப்படத்தின் இயக்குநர் வெற்றிமாறன்.