ஆரம்பமானது பாலா இயக்கும் ‘சூர்யா 41’ ஷூட்டிங்… விஜய் சேதுபதியின் ரீல் மகள் தான் ஹீரோயின்!

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இப்போது சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, இயக்குநர் பாலா இயக்கும் படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘வாடிவாசல்’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2020-ஆம் ஆண்டு ஜூலை 23-ஆம் தேதி சூர்யாவின் பர்த்டே சர்ப்ரைஸாக வெளி வந்தது.

இந்த படத்தை முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைப்புலி.எஸ்.தாணு தனது ‘V கிரியேஷன்ஸ்’ மூலம் தயாரிக்கிறார். சமீபத்தில், இப்படத்தின் டெஸ்ட் ஷூட் சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் பாலா இயக்கும் படத்தை சூர்யா – ஜோதிகா இணைந்து தங்களது ‘2D எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் மூலம் தயாரிக்கின்றனர்.

ஏற்கனவே, சூர்யா – பாலா காம்போவில் ‘நந்தா, பிதாமகன்’ என 2 சூப்பர் ஹிட் படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. சூர்யாவின் 41-வது படமான இதன் ஷூட்டிங் இன்று (மார்ச் 28-ஆம் தேதி) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதில் ஹீரோயினாக ‘உப்பெனா’ என்ற தெலுங்கு படம் மூலம் ஃபேமஸான க்ரித்தி ஷெட்டி நடிக்கிறாராம். இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.

Share.