இளையராஜாவை காயப்படுத்த வேண்டாம் – விஜயகாந்த் அறிக்கை

சமீபத்தில் இளையராஜா தான் எழுதிய நூல் ஒன்றில் அம்பேத்கரின் சிந்தனைகளை பிரதமர் மோடி நனவாக்கி வருகிறார் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் அம்பேத்கரையும் மோடியையும் இணைத்து பேசுவது சரியல்ல என பல எதிர்ப்பு குரல்கள் இளையராஜாவுக்கு எதிராக ஒலிக்கத் தொடங்கியது .

இந்நிலையில் நடிகரும் ,தேசிய முற்போக்கு திராவிடர் கழக தலைவருமான விஜயகாந்த் அவர்கள் இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் . அந்த அறிக்கையில் “அண்ணல் அம்பேத்கர், பிரதமர் நரேந்திர மோடி, இசைஞானி இளையராஜா ஆகியோர் சாதாரண குடும்பத்தில் பிறந்து, இன்றைக்கும் அவரவர்கள் துறையில் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக உள்ளனர். ஒரு சூரியன், ஒரு சந்திரன். அதேபோல் தான் இங்கு யாரையும் யாருடனும் ஒப்பிட்டு பேச முடியாது. அவர்களுக்கு நிகர் அவர்கள் தான்.

இளையராஜாவின் கருத்தை தனிப்பட்ட கருத்து மற்றும் கருத்து சுதந்திரம் என்ற உயர்ந்த நோக்கத்தோடு ஏற்றுக் கொண்டு மேலும் அவரை விமர்சனம் செய்து காயப்படுத்தாமல் இருப்பது பெருந்தன்மையானது என்று விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார் .

Share.