‘கொரோனா’ இரண்டாவது அலை… தடுப்பு பணிகளுக்காக நிதியுதவி வழங்கிய விஜயகாந்த்!
May 15, 2021 / 10:40 AM IST
|Follow Us
கொரோனா நோயின் இரண்டாவது அலை தாக்கம் இப்போது அதிகமாக இருப்பதால், மக்கள் பொருளாதாரம் இழந்து, உற்றார் உறவினர் உயிர் இழந்து, நோய் பற்றிய பீதியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்து இருக்கின்றனர். சமீபத்தில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் “#COVIDSecondWave-க்கு எதிரான போரில் நாம் அனைவரும் சேர்ந்து போரிட வேண்டிய நேரம் இது.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிடுவீர்! பேரிடர் காலத்தில் பெறப்படும் நிதி கொரோனா தடுப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். நன்கொடை – செலவினங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும்” என்று கூறியிருந்தார். தற்போது, இது தொடர்பாக பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “கொரோனா நோயை கட்டுப்படுத்த ஏதுவாக பல்வேறு மாவட்டங்களில் தேமுதிக-வின் சார்பாக கொரோனா நோயாளிகளுக்கு பல்வேறு நிவாரணங்களை வழங்கி உள்ளோம்.
அதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூரில் உள்ள ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தாராளமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு ஏற்கனவே அறிக்கை மூலம் தெரிவித்திருந்தேன். மேலும், தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தேன். இந்நிலையில், முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு தேமுதிக சார்பில் ரூ.10 லட்சம் வழங்க இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூரில் உள்ள ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தாராளமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு ஏற்கனவே அறிக்கை மூலம் தெரிவித்திருந்தேன்.
இந்நிலையில் முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு தேமுதிக சார்பில் ₹10 லட்சம் வழங்கப்படும். pic.twitter.com/BP0izeUBgx