• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » என் பெயரையோ, புகைப்படத்தையோ தொடர்புபடுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்… விஜய்யின் அறிக்கை!

என் பெயரையோ, புகைப்படத்தையோ தொடர்புபடுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்… விஜய்யின் அறிக்கை!

  • November 6, 2020 / 01:33 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
என் பெயரையோ, புகைப்படத்தையோ தொடர்புபடுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்… விஜய்யின் அறிக்கை!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ கடந்த ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம். இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம்.

படம் பொங்கலுக்கு ரிலீஸாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 65’யை இயக்குநர் நெல்சன் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், விஜய்யின் மக்கள் இயக்கம், ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் கட்சியாக மாறுகிறது என்றும், கட்சியின் பெயரை தலைமை தேர்தல் ஆணையத்தில் விஜய் பதிவு செய்துள்ளதாகவும் தகவல் கிடைத்தது. பின், விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் “அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்ய நான் தான் விண்ணப்பித்துள்ளேன். இது என்னுடைய முயற்சி தான், விஜய்யின் அரசியல் கட்சி அல்ல” என்று கூறியிருந்தார்.

தற்போது, இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இன்று என் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகா் ஓா் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார் என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன். அவர் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் அவர் அரசியல் தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் என்னை கட்டுப்படுத்தாது என்பதைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

மேலும், எனது ரசிகர்கள், எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைத்துக் கொள்ளவோ, கட்சி பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அக்கட்சிக்கும் நமக்கும் நமது இயக்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், என் பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #political party
  • #Vijay

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Vijay & Ghilli : விஜய் – த்ரிஷா ஜோடியாக நடித்த ‘கில்லி’… ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Vijay & Ghilli : விஜய் – த்ரிஷா ஜோடியாக நடித்த ‘கில்லி’… ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

The Greatest of all Time : தள்ளிப்போகிறதா விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ ரிலீஸ்?

The Greatest of all Time : தள்ளிப்போகிறதா விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ ரிலீஸ்?

Vijay & Sarkar : ஏ.ஆர்.முருகதாஸின் ‘சர்கார்’ படத்துக்காக விஜய் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Vijay & Sarkar : ஏ.ஆர்.முருகதாஸின் ‘சர்கார்’ படத்துக்காக விஜய் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Vijay & Mersal : சூப்பர் ஹிட்டான ‘மெர்சல்’ படத்துக்காக விஜய் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Vijay & Mersal : சூப்பர் ஹிட்டான ‘மெர்சல்’ படத்துக்காக விஜய் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Vijay & Theri : சூப்பர் ஹிட்டான ‘தெறி’ படத்துக்காக விஜய் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Vijay & Theri : சூப்பர் ஹிட்டான ‘தெறி’ படத்துக்காக விஜய் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Thalapathy 69 : ‘தளபதி 69’ஐ இயக்கும் வெற்றிமாறன்… இதற்காக விஜய்-க்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

Thalapathy 69 : ‘தளபதி 69’ஐ இயக்கும் வெற்றிமாறன்… இதற்காக விஜய்-க்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

13 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

13 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

13 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

13 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

13 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version