நாளை முதல் விக்ரம் படத்தின் முன்பதிவு தொடக்கம்

மாநகரம் , கைதி , மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கியவர் நடிகர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்பொழுது நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி வருகிறார் .இந்த படத்தில் நடிகர்கள் பஹத் பாசில், விஜய் சேதுபதி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‛விக்ரம்’ படம் அதிரடி ஆக்சன் கதையில் தயாராகி உள்ளது. மேலும் நடிகர் சூர்யா இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது . இதனால் படத்தின் மீதான மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்திற்கு வசனம் எழுதியுள்ளார் இயக்குனர் ரத்னா குமார் . இவர் மேயாத மான் ,ஆடை உள்ளிட்ட படங்களில் அவர் இயக்கி உள்ளார் . தற்பொழுது ” குளு குளு ” என்கிற படத்தை இயக்கி வருகிறார்.

விக்ரம் படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக ஒரு பேட்டியில் கலந்து கொண்டார் . அதில் நடிகர் சூர்யாவின் கதாபாத்திரம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது . அதற்கு பதில் அளித்த ரத்னா குமார் சூர்யாவின் கதாபாத்திரம் மிகுந்த வலிமையான கதாபாத்திரம் , அவர் நடித்த காட்சி வரும் போது திரையரங்கில் அனைவரும் நிச்சயம் ரசிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார் .

இந்நிலையில் விக்ரம் படம் மொத்தமாக 2 மணி நேரம் 53 நிமிடங்கள் உள்ளது என்ற தகவல் வெளியாகி இருந்தது . இந்நிலையில் விக்ரம் படத்தின் சென்சார் பற்றின தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் விக்ரம் படத்தின் முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது. கமல் , சூர்யா,விஜய் சேதுபதி , ஃபகத் பாசில் என பல நட்சத்திர நடிகர்கள் நடிதுள்ளதால் முன்பதிவில் இந்த படம் சாதனை புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share.