சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் விக்ரம் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார். இப்போது விக்ரம் நடிப்பில் ‘கோப்ரா, துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘மகான்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ‘மகான்’ படத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ்வும் சேர்ந்து நடித்துள்ளனர். இதில் விக்ரமுக்கு ஜோடியாக பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவரான சிம்ரன் நடித்துள்ளார். இன்னொரு ஹீரோயினாக வாணி போஜன் நடித்துள்ளார். மேலும், முக்கிய ரோல்களில் பாபி சிம்ஹா, சனந்த், முத்துக்குமார், தீபக் பரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார், ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. தற்போது, இப்படத்தின் புதிய ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது.
மகான் & மகான் மகன்
#Mahaan EXCLUSIVE
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் துருவ்♥️♥️#Soorayaatam OUT NOW
https://t.co/SuNPqzIQod
A @karthiksubbaraj Padam
A @Music_Santhosh Musical#HBDDhruvVikram #MahaanFirstSingle#ChiyaanVikram #DhruvVikram@SonyMusicSouth pic.twitter.com/wPe58arzpL
— Seven Screen Studio (@7screenstudio) September 22, 2021