நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பாகப்போகும் விக்ரம் பிரபு படம்… ‘புலிக்குத்தி பாண்டி’ ஃபர்ஸ்ட் லுக்!
December 30, 2020 / 06:09 PM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் விக்ரம் பிரபு. இப்போது நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’, ‘பாயும் ஒளி நீ எனக்கு’ மற்றும் இயக்குநர் முத்தையா படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் இயக்குநர் முத்தையா இயக்கும் படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக லக்ஷ்மி மேனன் நடித்து வருகிறார்.
இந்த படத்தை ‘சன் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் முத்தையாவே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘M ஸ்டுடியோஸ்’ மூலம் தயாரித்து வருகிறார். தற்போது, இப்படத்திற்கு ‘புலிக்குத்தி பாண்டி’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலை தயாரிப்பு நிறுவனமே தங்களது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியதுடன், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது. என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கும் இதற்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தை நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்ப ப்ளான் போட்டுள்ளனர்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.