விக்ரம் பிரபு நடித்துள்ள ‘டாணாக்காரன்’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த டீசர்!

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் விக்ரம் பிரபு. இப்போது நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’, ‘பாயும் ஒளி நீ எனக்கு’ மற்றும் ‘டாணாக்காரன்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் இயக்குநர் தமிழ் இயக்கியுள்ள ‘டாணாக்காரன்’ படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடித்துள்ளார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் லால், எம்.எஸ்.பாஸ்கர், மதுசூதனன் ராவ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை ‘பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. ஜிப்ரான் இசையமைத்து வரும் இதற்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்கிறார், பிலோமின் ராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

சமீபத்தில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்நிலையில், இன்று (ஜூலை 16-ஆம் தேதி) இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் ரிலீஸ் செய்துள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் டீசர் இப்படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது.

Share.