இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம்- துருவ் விக்ரம் இணைந்த நடிப்பில் “சியான்60” என பெயரிடப்பட்டுள்ள திரைப்படம் விரைவில் உருவாகவிருப்பதாக தகவல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து தற்போது, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவரவிருக்கும் “ஜகமே தந்திரம்” படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஷ் கிருஷ்ணாவை ‘சியான் 60’ படத்திலும் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.
இவர் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த “ஜில் ஜங் ஜக்” மற்றும் இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் வெளிவந்த “அவள்” திரைப்படத்திலும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இதைத்தொடர்ந்து அவர் “ஜகமே தந்திரம்”திரைப்படத்தில் ஒளிப்பதிவு செய்துள்ளார். லாக்டவுன் முடிந்ததும் இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இதை தொடர்ந்து இவர் தற்போது “சியான்60 “படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளார். விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணையும் முதல் திரைப்படமான இதில் அனிருத் ரவிச்சந்திர் இசையமைக்கவுள்ளார்.இது விக்ரம் நடித்து அனிருத் இசையில் வெளிவரும் முதல் திரைப்படமாகும்.
செவன் ஸ்கிரீன்ஸ் புரோடக்சன் லலித் குமார் தயாரிக்கும் இந்த கேங்ஸ்டர் ட்ராமா திரைப்படத்தின் படப்பிடிப்பு,கொரோனா லாக்டவுன் முடிந்து இரண்டு மாதங்களில் தொடங்கும் என்று திரைப்படக் குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவரவிருக்கும் ஜகமே தந்திரம் படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.