ஏ.ஆர்.ரஹ்மானின் பர்த்டே ஸ்பெஷல்… ‘கோப்ரா’ டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் விக்ரம் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார். இப்போது விக்ரம் நடிப்பில் ‘கோப்ரா, துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன், மஹாவீர் கர்ணா’ மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் படம் என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் விக்ரமின் நடிப்புக்கு சரியான தீனி போடும் வகையில் அமைந்துள்ள படம் ‘கோப்ரா’. இந்த படத்தை ‘டிமான்ட்டி காலனி’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்க, ஹீரோயினாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். மேலும், மிக முக்கிய ரோலில் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்து கொண்டிருக்கிறார்.

இந்த படத்துக்கு இன்னொரு ஹைலைட்டாக அமைந்திருப்பது ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மானின் இசை. ஏற்கனவே, இசை புயலின் இசையில் ‘தும்பி துள்ளல்’ பாடல் வெளியாகி ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பிடித்தது. இந்நிலையில், இன்று ஏ.ஆர்.ரஹ்மானின் பர்த்டே என்பதால் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை வருகிற ஜனவரி 9-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக இயக்குநர் அஜய் ஞானமுத்து ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

Share.