ரஜினியின் ‘ஜெயிலர்’ல் ‘வர்மன்’ ரோலில் நடித்த அனுபவம் குறித்து பேசிய விநாயகன்!
September 6, 2023 / 10:39 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இவர் நடிப்பில் ‘ஜெயிலர், லால் சலாம்’, இயக்குநர் த.செ.ஞானவேல் படம், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது.
இதில் ரஜினியின் 169-வது படமான ‘ஜெயிலர்’ கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்கியுள்ளார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இதற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இதில் முக்கிய ரோல்களில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி, மிர்னா மேனன், ‘ரித்து ராக்ஸ்’ ரித்விக், சுனில், தமன்னா, கிஷோர், ஜாஃபர் சாதிக், மாரிமுத்து, சரவணன், அறந்தாங்கி நிஷா, மகாநதி ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும், கெஸ்ட் ரோல்களில் மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மோகன்லால், கன்னட நடிகர் ஷிவராஜ்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் நடித்துள்ளனர்.
தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, வசூலிலும் மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் ‘வர்மன்’ என்ற வில்லன் ரோலில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் விநாயகன் பேசியுள்ள வீடியோ பதிவு வெளியாகியுள்ளது.
Actor Vinayakan speaks about his iconic character "Varman" and more Manasilayo!