அடேங்கப்பா …நடிகர் கார்த்தியின் விருமன் படத்தின் வசூல் இத்தனை கோடியா ?
August 30, 2022 / 11:20 AM IST
|Follow Us
நடிகர் கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான படம் சுல்தான் . இந்த படத்தை இயக்கியவர் பாக்கியராஜ் கண்ணன் . ராஷ்மிகா மந்தண்ணா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார் .இந்த படம் கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடம் பெற்றது .இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி விருமன் என்கிற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் . இந்த படத்தை முத்தையா இயக்கி உள்ளார் . இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா விருமன் படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் .
மேலும் கஞ்சா பூ கண்ணால, மதுர வீரன் உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது .முதலில் இந்த படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக இருந்தது . ஆனால் வேறு சில காரணங்களால் இந்த படம் ஆகஸ்ட் 12 -ஆம் தேதி வெளியிடப்பட்டது . இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி இரண்டாவது முறையாக நடித்து இருக்கும் படம் என்பதால் இந்த படத்தின் மீது பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது .
இந்நிலையில் திரையரங்குகளில் வெளியான இந்த படம் தொடர்ந்து நல்ல விமர்சனங்கள் பெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் இந்த படம் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது . விருமன் படம் வெளியான முதல் 17 நாளில் உலக அளவில் 53.65 கோடி வசூல் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.