பிரம்மாண்டமாக நடக்க இருக்கும் விருமன் இசைவெளியிட்டு விழா !

நடிகர் கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான படம் சுல்தான் . இந்த படத்தை இயக்கியவர் பாக்கியராஜ் கண்ணன் . ராஷ்மிகா மந்தண்ணா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார் .இந்த படம் கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடம் பெற்றது .இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி விருமன் என்கிற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் . இந்த படத்தை முத்தையா இயக்கி உள்ளார் . இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா விருமன் படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் . சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது .

மேலும் கஞ்சா பூ கண்ணால என்கிற பாடலின் ப்ரோமோவும் வெளியானது . இந்நிலையில் விருமன் படத்தின் வெளியீட்டு தேதியை 2டி நிறுவனம் அறிவித்து இருந்தது .வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி, விநாயகர் சதுர்த்தி அன்று, வீரநடை போட்டு வருகிறான் விருமன் என்று தெரிவித்து இருந்தது 2டி நிறுவனம் . இந்நிலையில் கோப்ரா படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முழுவதமாக நிறைவடையாமல் இருப்பதால் கோப்ரா படம் விருமன் படம் வெளியாக இருந்த தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது .

இதனால் விருமன் படம் ஆகஸ்ட் மாதம் 11-ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது . மேலும் விருமன் படத்தின் இசை வெளியிட்டு விழா ஆகஸ்ட் மாதம் -3-ஆம் தேதி மதுரையில் நடக்க இருக்கிறது .இந்த விழாவில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஷங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொள்ள இருக்கிறாரகள் என்ற செய்தி வெளியாகி உள்ளது .

Share.