சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் விஷால். இப்போது நடிகர் விஷால் நடிப்பில் ‘துப்பறிவாளன் 2’, ‘வீரமே வாகை சூடும்’, ‘லத்தி சார்ஜ்’ மற்றும் இயக்குநர் ஆனந்த் ஷங்கர் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ள படம் ‘எனிமி’ (Enemy).
இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் மூலம் ஃபேமஸான மிருணாளினி ரவி நடித்துள்ளார். இதில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் ஆர்யா நடித்துள்ளார். ஆர்யாவுக்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸ் நடித்துள்ளார். மேலும், முக்கிய ரோலில் பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார். இதனை வினோத் குமார் தயாரித்துள்ளார். தமன் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளாராம்.
இதன் ஃபைனல் ஷெடியூல் ஷூட்டிங் கடந்த ஜூலை மாதம் 12-ஆம் தேதி முடிவடைந்தது. சமீபத்தில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை ரிலீஸ் செய்தனர். தற்போது, இந்த படத்தின் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது. படத்தை வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளிக்கு திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
The wait is over
The much awaited #EnemyTrailer is out now#Enemy Grand release on this Diwali, Nov 4th.
Tamil
https://t.co/eNhVUJfMIw
Teluguhttps://t.co/nd4mw1oRMp
#EnemyDeepavali @VishalKOfficial @arya_offl @anandshank @vinod_offl @MusicThaman @SamCSmusic pic.twitter.com/BUY81OOJgc— Vishal Film Factory (@VffVishal) October 23, 2021