மாஸ்டர்’ படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடல்… சூப்பராக நடனமாடி அசத்திய VJ அஞ்சனா!

பிரபல டிவி சேனலான ‘சன் மியூசிக்’-யில் பாப்புலர் தொகுப்பாளினியாக இருப்பவர் அஞ்சனா ரங்கன். இவர் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சிகளால், இவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. மேலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான போட்டோஷூட் ஸ்டில்ஸை அடிக்கடி ஷேரிட்டு வருகிறார் அஞ்சனா.

2016-ஆம் ஆண்டு சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அஞ்சனா. சந்திரன் ‘கயல்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரியானவர். அதன் பிறகு ‘ரூபாய், திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்தார் சந்திரன். அஞ்சனா – சந்திரன் தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார்.

தற்போது, டாப் ஹீரோ ‘தளபதி’ விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற ‘வாத்தி கம்மிங்’ என்ற சூப்பர் ஹிட் பாடலுக்கு அசத்தலாக நடனமாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார் அஞ்சனா ரங்கன். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கி, அனிருத் இசையமைத்த ‘மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகமாரக ஓடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Anjana Rangan (@anjana_rangan)

Share.