ஏ.கே.61 படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிய எப்பொழுது ?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார் . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வலிமை . இந்த படத்தை இயக்கியவர் ஹச்.வினோத் . இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை . அதனை தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹச். வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து கொண்டிருக்கிறார் . மேலும் அஜித் அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார் . அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது .

இந்நிலையில் நடிகர் அஜித் நடிக்கும் அவரது 61-வது படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாதில் நடந்து முடிந்துள்ளது. இந்த படத்தின் கதை வங்கி கொள்ளையை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது . மேலும் இந்த படத்திற்காக ஒன்பது ஏக்கரில் வங்கி செட் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது .

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவாக நடந்து கொண்டு இருக்கிறது . இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கவுள்ளுது என்ற செய்தி வெளியாகி இருக்கிறது . நடிகர் அஜித் தற்போது பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளுக்கு தனது பைக்கில் சுற்றுலா சென்று உள்ளார் .அவர் அங்கிருந்து வந்தவுடன் ஜூலை மாதம் தொடங்கும் என்று தெரியவந்துள்ளது .இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளிக்கு வெளியாவது உறுதியாகி இருக்கிறது . இதனால் படத்தின் அணைத்து பணிகளும் மும்முரமாய் நடந்து வருகிறது .

Share.