நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் மற்றும் யஷ் நடித்துள்ள ‘கே.ஜி.எஃப் 2’ ஆகிய படங்கள் சமீபத்தில் வெளியாகின . இந்த நிலையில் மிகவும் எதிர்பார்ப்புடன் வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது . விஜய் ரசிகர்கள் பலருக்கும் இந்த படம் பிடிக்கவில்லை .இயக்குனர் நெல்சன் தங்களை ஏமாற்றி விட்டதாக சொல்கிறார்கள் விஜய் ரசிகர்கள் .
அதே சமயம் நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகி உள்ள “கே.ஜி.எஃப் 2” படம் மிகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . தமிழ், தெலுங்கு , கன்னடம் ,ஹிந்தி என வெளியான அனைத்து இடங்களிலும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள் . இந்த நிலையில் தமிழ் திரைத்துறையினர் பலரும் ‘கே.ஜி.எஃப் 2’ படத்தை பார்த்து விட்டு பாராட்டி வருகின்றனர் .
இந்நிலையில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான ஓர் இரவு படம் படம் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமானவர் சாம்.c.s .இதனை தொடர்ந்து விக்ரம் வேதா ,கைதி , எனிமி உள்ளிட்ட பல படங்களுக்கு இசை அமைத்து உள்ளார் இவர்.
சாம் C.S ‘கே.ஜி.எஃப் 2’ படத்தை பார்த்து விட்டு ஒரு ட்வீட் செய்துள்ளார் . அதில் ரியல் வாழ்க்கையில் பில்டப் பண்ணாம ரீல் வாழ்க்கையில் பில்டப் பண்ணி இருக்காங்க, வேற லெவல் வாழ்த்துக்கள் என்று ட்வீட் செய்துள்ளார்.
பொதுவாக விஜய் படங்களில் தளபதி என்று விஜயை அழைப்பார்கள் . உதாரணத்திற்கு மாஸ்டர் படத்தில் அண்ணன் யாரு தளபதி போன்று வரிகள் வரும் . இது போன்ற ரியல் பில்டப் காட்சிகள் விஜய் படத்தில் வரும் எனவே இவர் விஜய்யை தான் மறைமுகமாக தாக்கி உள்ளார் , நடிகர் விஜய் தாக்கப்பட்டாரா என்று அனைவரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.