நடிகர் விஜய் தாக்கப்பட்டாரா ?

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் மற்றும் யஷ்  நடித்துள்ள  ‘கே.ஜி.எஃப் 2’  ஆகிய படங்கள் சமீபத்தில் வெளியாகின . இந்த நிலையில் மிகவும் எதிர்பார்ப்புடன் வெளியான  பீஸ்ட் படம்  கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது . விஜய் ரசிகர்கள் பலருக்கும் இந்த படம் பிடிக்கவில்லை .இயக்குனர் நெல்சன் தங்களை ஏமாற்றி விட்டதாக சொல்கிறார்கள் விஜய் ரசிகர்கள் .

அதே சமயம் நடிகர் யஷ்  நடிப்பில் வெளியாகி உள்ள “கே.ஜி.எஃப் 2” படம் மிகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . தமிழ், தெலுங்கு , கன்னடம் ,ஹிந்தி என வெளியான அனைத்து  இடங்களிலும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள் . இந்த நிலையில் தமிழ் திரைத்துறையினர் பலரும் ‘கே.ஜி.எஃப் 2’ படத்தை பார்த்து விட்டு பாராட்டி வருகின்றனர் .

இந்நிலையில் கடந்த 2010-ஆம்  ஆண்டு வெளியான ஓர் இரவு படம் படம் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமானவர் சாம்.c.s .இதனை தொடர்ந்து விக்ரம் வேதா ,கைதி ,  எனிமி  உள்ளிட்ட பல படங்களுக்கு இசை அமைத்து உள்ளார்  இவர்.

சாம் C.S   ‘கே.ஜி.எஃப் 2’ படத்தை பார்த்து விட்டு ஒரு ட்வீட் செய்துள்ளார் . அதில்  ரியல் வாழ்க்கையில் பில்டப் பண்ணாம ரீல்   வாழ்க்கையில்  பில்டப் பண்ணி இருக்காங்க, வேற லெவல்  வாழ்த்துக்கள் என்று ட்வீட் செய்துள்ளார்.

பொதுவாக விஜய் படங்களில் தளபதி என்று விஜயை அழைப்பார்கள் . உதாரணத்திற்கு மாஸ்டர் படத்தில் அண்ணன்  யாரு தளபதி போன்று வரிகள் வரும் . இது போன்ற ரியல் பில்டப் காட்சிகள் விஜய் படத்தில் வரும் எனவே இவர் விஜய்யை தான் மறைமுகமாக தாக்கி உள்ளார் , நடிகர் விஜய் தாக்கப்பட்டாரா  என்று அனைவரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

Share.