‘கே.ஜி.எஃப்’ படத்தின் பார்ட் 2-வை இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கி கொண்டிருக்கிறார். இந்த படத்தில் கதையின் நாயகனாக யாஷ் நடிக்கிறாராம். மேலும், முக்கிய ரோல்களில் ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
‘அதீரா’ என்ற பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் சஞ்சய் தத் நடிக்கிறார். இதன் முதல் பாகம் சூப்பர் ஹிட்டானதால், ரசிகர்களுக்கு பார்ட் 2 மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவல் உச்சத்தில் இருக்கிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வந்தது. நேற்று (டிசம்பர் 20-ஆம் தேதி) தான் படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த படத்தின் இயக்குநர் பிரஷாந்த் நீல் தனது ட்விட்டர் பக்கத்தில் வருகிற ஜனவரி 8-ஆம் தேதி இதன் ஃபர்ஸ்ட் லுக் டீசரை ஹீரோ யாஷின் பர்த்டே ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக கூறியுள்ளார். படத்தை கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
Nothing short of a crazy, exhausting and fulfilling shoot
The best team hands down!!!!@duttsanjay sir a true warrior in real life
@TheNameIsYash a treat to work with as always
An end to the climax shootCant wait for the world to see #KGFChapter2 only on the big screen
pic.twitter.com/7EZSAnWehY
— Prashanth Neel (@prashanth_neel) December 20, 2020
A glance into the Empire
It might have taken a year longer for this, but we are coming stronger, bigger & deadlier!#KGFChapter2TeaserOnJan8 at 10:18 AM on @hombalefilms youtube.@VKiragandur @TheNameIsYash @duttsanjay @TandonRaveena @SrinidhiShetty7 @BasrurRavi @bhuvangowda84 pic.twitter.com/evCn5jiBkn— Prashanth Neel (@prashanth_neel) December 21, 2020