‘வேதாளம்’ ஷூட்டிங் ஸ்பாட்… யோகி பாபுவுக்காக அந்த விஷயத்தை செய்த அஜித்!

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’.

இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம். ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். அஜித்துக்கு எதிரியாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறாராம். இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

Yogi Babu Tweeted About Ajith1

இதன் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்நிலையில், ‘வேதாளம்’ படத்தின் ஷூட்டிங் நடந்த போது பிரபல காமெடி நடிகர்களான யோகி பாபு – மொட்ட ராஜேந்திரன் இருவரையும் அமர வைத்து நடிகர் ‘தல’ அஜித் ஒரு போட்டோ எடுத்ததாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை நடிகர் யோகி பாபுவே ட்விட்டரில் தெரிவித்ததுடன், அஜித் இவர்களை போட்டோ எடுப்பது போன்ற ஒரு ஸ்டில்லையும் வெளியிட்டுள்ளார்.

Yogi Babu Tweeted About Ajith2

Share.