முன்னணி ஹீரோ சொன்ன அடுக்கடுக்கான கரெக்ஷன்ஸ்… கடுப்பான இளம் இயக்குநர்!
May 1, 2021 / 07:38 PM IST
|Follow Us
சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அந்த நடிகர். இந்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் தான் இந்த நடிகர் பிரபல டிவி சேனலில் தொகுத்து வழங்கிய ஒரு ரியாலிட்டி ஷோவின் ஷூட்டிங் முற்றிலும் நிறைவு பெற்றது. அதன் பிறகு அரசியலில் பிஸியாகி விட்டார் நடிகர்.
இப்போது அந்த நடிகரின் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநரின் பார்ட் 2 படமும், இளம் இயக்குநரின் படமும் லைன் அப்பில் இருக்கிறது. இதில் பிரம்மாண்ட இயக்குநரின் படம் பல சிக்கலில் சிக்கி அடுத்து எப்போது தொடங்கும் என்றே தெரியாமல் பாதியில் நிற்கிறது. இளம் இயக்குநரின் படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது.
சமீபத்தில், அந்த நடிகரை சந்தித்த இளம் இயக்குநர் முழு கதையையும் சொல்லியிருக்கிறார். அப்போது, இயக்குநரிடம் கதையில் பல கரெக்ஷன்ஸ் பண்ணுங்க என்று ஹீரோ சொல்லியிருக்கிறார். இப்படி சொன்னதால், அந்த இயக்குநர் கடுப்பாகி விட்டாராம். ஏனெனில், இது ஒன்றும் முதல் முறையல்ல, ஐந்தாவது முறையாக ஹீரோ சொல்லும் கரெக்ஷன்ஸாம். இருப்பினும் முன்னணி ஹீரோ என்பதால், அவர் சொன்ன கரெக்ஷன்ஸை எல்லாம் ஏற்றுக் கொண்டு, அதை மாற்றி விடுகிறேன் என்று கூறியிருக்கிறாராம் அந்த இளம் இயக்குநர்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.