யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளர், பாடகர், பாடல் எழுத்தாளர், தயாரிப்பாளர் எனப் பன்முகத் திறமைகள் கொண்டவர்.இசைஞானி இளையராஜாவின் இளையமகன்.
1997ம் வருடம் பி நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த “அரவிந்தன்” என்ற திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா முதன்முதலில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு வயது 16 தான். இந்த இசை அவ்வளவாக மக்கள் மத்தியில் வெற்றி பெறாத நிலையில் மேலும் இரண்டு படங்களின் இசையும் தோல்வியுற்றது. அப்போது வசந்த் இயக்கத்தில் 1999ஆம் வருடம் வெளிவந்த “பூவெல்லாம் கேட்டுப்பார்” படத்தில் இவரது பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது. அன்றிலிருந்து இவர் இசைக்கென தனி ரசிகர் பட்டாளமே இன்றுவரை இருக்கிறார்கள்.
இவர் 2014 ஆம் ஆண்டு “இஸ்லாம்” மதத்தை தழுவினார்.தனது பெயரை அப்துல் காலிக் என்று மாற்றி கொண்டார்.பின் 2015 ஆம் வருடம் ஷாஃப்ரூன் நிஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
தற்போது இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வரும் யுவன் சங்கர் ராஜா,தனது வாழ்க்கை பற்றிய பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
வலிமை படத்தைப் பற்றி ஒரு ரசிகர் கேட்டதற்கு “வலிமை படத்தின் பின்னணி இசைக்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.கொரோனா லாக்டவுன் காரணமாக, அனைத்தும் தாமதமாகிவிட்டது”என்று கூறியிருக்கிறார்.
நடிகர் விஜய் பற்றி ஒருவரின் கேள்விக்கு”எனக்கு பல சமயங்களில், மிகப்பெரிய ஊக்கமளித்துள்ளார்”என்று கூறியுள்ளார்.
மேலும் ஒருவர்”அண்ணா, உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய கஷ்டம் என்ன? நீங்கள் அதை எப்படி கடந்தீர்கள்?”என்று கேட்டுள்ளார்.
அதற்கு யுவன்”இஸ்லாம் மதத்திற்கு மாறியதற்கு முன்,
எனக்கு தற்கொலை எண்ணங்கள் வந்ததுண்டு, ஆனால் அவற்றையெல்லாம் கடந்து செல்ல இஸ்லாம் எனக்கு உதவியுள்ளது” என்று கூறியிருக்கிறார்.
தற்போது அவர் தல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் “வலிமை” படத்திற்கு இசையமைத்து வருகிறார்.