முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம்.
ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். அஜித்துக்கு எதிரியாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறாராம். இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். தற்போது, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ‘u1records’ என்ற இணையதள பக்கத்தை ஆரம்பித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலை யுவன் ஷங்கர் ராஜாவே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி, அஜித்தின் ரசிகர்கள் கடந்த சில மாதங்களாக ‘வலிமை’ படத்தின் அப்டேட்டுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்காகவே புதிதாக ஆரம்பித்திருக்கும் இணையதள பக்கத்தில் ‘வலிமை’ படத்தின் இன்ட்ரோ பாடலுக்கான கம்போஸிங் பணியை முடித்துள்ளதாக யுவன் ஷங்கர் ராஜா அறிவித்துள்ளார். இந்த இன்ட்ரோ பாடலை பாப்புலர் இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளாராம். இதனால் அஜித்தின் ரசிகர்கள் ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளனர்.
We are live now.. #U1records https://t.co/qYrj6BRpLE
— Raja yuvan (@thisisysr) February 10, 2021
இப்போ போடுறா வெடிய..
#Valimai
pic.twitter.com/LSOc4dkt8B
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) February 10, 2021