திரையுலகில் அறிமுகமாகி 47 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடிய ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இவர் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் 2020-ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியானது.

இந்த படத்துக்கு பிறகு ரஜினி, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்திருந்தார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் கடந்த ஆண்டு (2021) நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக திரையரங்குகளில் ரிலீஸானது. ரஜினியின் 169-வது படமான ‘ஜெயிலர்’-ஐ பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்குகிறார்.

‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் மிக முக்கிய ரோல்களில் பிரியங்கா மோகன், ஷிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடிக்கவிருக்கிறார்கள். இப்படத்திற்கான டெஸ்ட் ஷூட் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி நடைபெற்றது.

இதன் ஷூட்டிங்கை வருகிற ஆகஸ்ட் 22-ஆம் தேதி முதல் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர். படத்தை அடுத்த ஆண்டு (2023) ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், ரஜினி திரையுலகில் அறிமுகமாகி 47 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடியதாக தகவல் கிடைத்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்டில் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

 

Share.