‘பிக் பாஸ் 6’யில் கலந்து கொள்ளப்போகிறாரா பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர்?… இன்ஸ்டாவில் அவரே போட்ட பதிவு!
October 8, 2022 / 02:38 PM IST
|Follow Us
விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5 கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 3-ஆம் தேதி முதல் இந்த ஆண்டு (2022) ஜனவரி 16-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. இந்த சீசனில் ராஜு ஜெயமோகன் டைட்டில் வின்னர் என்றும், பிரியங்கா ரன்னர் அப் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’யில் இந்த ஆண்டு (2022) ஜனவரி மாதம் 30-ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதி வரை 24 மணி நேரமும் ‘பிக் பாஸ் அல்டிமேட்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியை சில நாட்கள் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார்.
பின், கமல் ‘விக்ரம்’ படத்தின் ஷூட்டிங்கில் பிஸியானதால் அவருக்கு பதிலாக நடிகர் சிலம்பரசன் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பாலாஜி முருகதாஸ் தான் டைட்டில் வின்னர் என்றும், நிரூப் ரன்னர் அப் என்றும் அறிவிக்கப்பட்டது. சமீபத்தில், ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 6-க்கான பணிகள் துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை வருகிற அக்டோபர் 9-ஆம் தேதி முதல் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர்.
இந்த சீசன் 6-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். கடந்த சில நாட்களாக இதில் பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவரும், நடிகருமான கார்த்திக் குமார் கலந்து கொள்ளப்போவதாக தண்டோரா போடப்படுகிறது. தற்போது, இது தொடர்பாக ரசிகர் ஒருவர் கார்த்திக் குமாரிடம் இன்ஸ்டாகிராமில் கேள்வி கேட்க, அதற்கு அவர் “நான் கலந்து கொள்ள விரும்பவில்லை” என்று பதில் கூறியுள்ளார். ‘பிக் பாஸ்’ சீசன் 4-யில் சுசித்ரா கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus